" alt="" aria-hidden="true" />
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா பீதி காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொரோனா பீதியால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் ரெயில் சேவைகள், சாலை போக்குவரத்து சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், போதிய பயணிகள் கூட்டம் இல்லாததால் நாடு முழுவதும் 168 ரெயில் சேவைகளை ரத்து செய்வதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
இதற்கிடையில், முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் எந்த அபராதமும் விதிக்கப்படாது எனவும், பயணிகளின் முமு பணமும் திருப்பித்தரப்படும் எனவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.